மாநில அறிவியல் கண்காட்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு


தர்மபுரி, : அறிவியல் கண்காட்சியில் முதலிடம் பெற்ற அரசு பள்ளி மாணவர்கள், மாநில அறிவியல் கண்காட்சிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், பள்ளிப்பட்டி அரசு பள்ளியில், 9ம் வகுப்பு மாணவர்கள், தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி பங்கேற்றனர். இவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்படக்கூடிய உபகரணத்தை செய்து காண்பித்து, மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தனர். இந்நிலையில், அடுத்து மாதம் மாநில அளவில் திருச்சியில் நடக்க உள்ள அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இந்த அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற மாணவர்களை, பள்ளி தலைமையாசிரியர் பழனிசாமி, ஆசிரியர்கள் மற்றும் கல்வி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement