விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்குசிறப்பு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி
விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்குசிறப்பு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி, : கிருஷ்ணகிரி, அரசு ஆடவர் கலைக்கல்லுாரியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், விடுதிகளில் தங்கி பயிலும் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு சிறப்பு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வரவேற்றார்.
மாவட்ட கலெக்டர் சரயு தலைமை வகித்து பேசுகையில், ''மாணவ, மாணவியர் தினந்தோறும் செய்தித்தாள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அது நீங்கள் எழுதும் போட்டித்தேர்வுகளுக்கு உதவியாக இருக்கும்,'' என்றார்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பத்மலதா, கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லுாரி முதல்வர் அனுராதா, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சுந்தரம் மற்றும் விடுதிகளில் தங்கி பயிலும், 350 கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் விடுதி காப்பாளர்கள் கலந்து கொண்டனர்.