தை பிறக்குது; நொய்யலுக்கு வழி பிறக்குமா?
திருப்பூர்,; இன்னும் நான்கு நாளில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா களைகட்டப் போகிறது. திருப்பூரில் உள்ள நொயயல் நதிக்கரையில் பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டாட, திருப்பூர் மாநகராட்சி மற்றும் நொய்யல் பண்பாட்டு இயக்கம் உள்ளிட்ட அமைப்பினர் தயாராகி வருகின்றனர்.
'கோவையில் இருந்து திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டம் வரை ஓடும் நொய்யலாறு, 156 கி.மீ., நீளம் கொண்டது. ஒரு காலத்தில் நன்னீர் ஓடிய இந்த ஆற்றில், மக்கள் குளிப்பது, நீரை விவசாயத்துக்கு பயன்படுத்துவது என, திருப்பூரின் ஜீவநதியாக பாய்ந்தோடிக் கொண்டிருந்தது.ஆனால், நொய்யல் ஆற்றையொட்டியுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் சாயக்கழிவு நீர், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆகியவை நொய்யல் ஆற்றில் கலந்து, முற்றிலுமாக மாசுப்படுத்தியது. சாய ஆலைகளில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க, தொழிற்சாலைகளின் ரசாயனம் கலப்பது ஓரளவு கட்டுக்குள் வந்தது. இருப்பினும், நொய்யல் நதி, மாசு நிறைந்த நதியாகவே ஓடிக் கொண்டிருக்கிறது.
வரும், 14ம் தேதி தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நொய்யல் பண்பாட்டு மையம் சார்பில் நொய்யல் நதிக்கரையில் பொங்கல் விழா கொண்டாட ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதை போல, இந்த பொங்கல் விழா, ஒட்டு மொத்த நொய்யல் நதியை மீட்டெடுக்கு வழிகாட்டுமா, விழா ஏற்பாட்டாளர்கள் இதை முன்னெடுப்பார்களா என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
மீட்டெடுக்க வேண்டும்...
நொய்யல் ஆற்றுநீர் எங்கு நோக்கினும் மாசடைந்து கிடைக்கிறது; கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைந்துள்ள இடத்திலேயே குப்பைக்கழிவுகள் தேங்கிக்கிடக்கின்றன; ஆற்றுநீர் துர்நாற்றம் வீசுகிறது. தொழிற்சாலைகளின் சாயக்கழிவுநீர் கலக்கிறது. கால்நடைகளும் பாதிக்கின்றன. திருப்பூரில் அதிகளவில் கேன்சர் பரவ, நொய்யல் ஆற்றின் மாசு தான் காரணம் என, நிபுணர் குழுவின் கள ஆய்வறிக்கையே தெரிவிக்கிறது. துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்து, நதியை மீட்டெடுக்க வேண்டியது அவசியம்; நதியின் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும்.
- திருஞானசம்பந்தன் தலைமை ஒருங்கிணைப்பாளர் நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்
நொய்யல் பொலிவு பெறும்!
காவிரியாற்றின் கிளை நதியாக நொய்யல் ஆற்றில், தொழிற்சாலைகளின் சாயக்கழிவுநீர் கலப்பது தடுக்கப்பட்டிருக்கிறது. வீடுகளில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர் கலப்பது, தடுக்கப்படவில்லை. 'நடந்தாய் வாழி காவிரி' திட்டத்தில், நொய்யல் நதியை சுத்தப்படுத்த, மத்திய நீர்வள ஆணையம் அனுமதியளித்துள்ளது. சாக்கடை நீர் வெளியேறும் இடங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, சுத்திகரிக்கப்பட்ட நீரை ஆற்றில் வெளியேற்றும் வகையில், மாநில அரசின் பொதுப்பணித்துறையினர் பணி துவங்க இருக்கின்றனர். இத்திட்டம், 2 ஆண்டுகளில் நிறைவு பெறும்; நதி, பொலிவு பெறும் என, நம்புகிறோம்.
- ரத்தினசாமி தலைவர், ஜீவநதி நொய்யல் சங்கம்
திருப்பூர், ஜன. 10-
இன்னும் நான்கு நாளில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா களைகட்டப் போகிறது. திருப்பூரில் உள்ள நொயயல் நதிக்கரையில் பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டாட, திருப்பூர் மாநகராட்சி மற்றும் நொய்யல் பண்பாட்டு இயக்கம் உள்ளிட்ட அமைப்பினர் தயாராகி வருகின்றனர்.
'கோவையில் இருந்து திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டம் வரை ஓடும் நொய்யலாறு, 156 கி.மீ., நீளம் கொண்டது. ஒரு காலத்தில் நன்னீர் ஓடிய இந்த ஆற்றில், மக்கள் குளிப்பது, நீரை விவசாயத்துக்கு பயன்படுத்துவது என, திருப்பூரின் ஜீவநதியாக பாய்ந்தோடிக் கொண்டிருந்தது.
ஆனால், நொய்யல் ஆற்றையொட்டியுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் சாயக்கழிவு நீர், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆகியவை நொய்யல் ஆற்றில் கலந்து, முற்றிலுமாக மாசுப்படுத்தியது. சாய ஆலைகளில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க, தொழிற்சாலைகளின் ரசாயனம் கலப்பது ஓரளவு கட்டுக்குள் வந்தது. இருப்பினும், நொய்யல் நதி, மாசு நிறைந்த நதியாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. வரும், 14ம் தேதி தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நொய்யல் பண்பாட்டு மையம் சார்பில் நொய்யல் நதிக் கரையில் பொங்கல் விழா கொண்டாட ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதை போல, இந்த பொங்கல் விழா, ஒட்டு மொத்த நொய்யல் நதியை மீட்டெடுக்க வழிகாட்டுமா, விழா ஏற்பாட்டாளர்கள் இதை முன்னெடுப்பார்களா என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.