ஸ்ரீவில்லிபுத்துாரில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மடவார் வளாகத்தில் தமிழ்நாடு அரசு நுகர்வோர் வாணிப கழகத்தின் சார்பில் நெல் கொள்முதல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது.

தற்போது வத்திராயிருப்பு தாலுகாவில் கான்சாபுரம், ராமசாமியாபுரம், வத்திராயிருப்பு, சுந்தரபாண்டியம், தம்பிபட்டியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு விவசாயிகள் கொண்டு வரும் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவிலும் நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் வற்புறுத்தி வந்தனர்.

இதனையடுத்து நேற்று முதல் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. தர கட்டுப்பாட்டு அலுவலர் முத்துச்செல்வம், கொள்முதல் அலுவலர் ராஜவேல், எழுத்தர் ராமராஜ், விவசாயிகள் முருகேசன், மோகன்ராஜ், ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

இங்கு சன்ன ரக நெல் கிலோ ஒன்றுக்கு ரூ. 24.50, மோட்டார் ரகநெல் 24.05 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. மார்ச் 31 வரை தினமும் காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை நெல் கொள்முதல் செய்யப்படுமென அலுவலர்கள் தெரிவித்தனர்.

Advertisement