முளைப்பாரி திருவிழா

காரியாபட்டி: காரியாபட்டி பணிக்கனேந்தல் உச்சி காளியம்மன் கோயில், ஏ. நெடுங்குளம் ராஜகாளியம்மன் கோயில் மார்கழி மாத திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பால்குட ஊர்வலம், அக்னி சட்டி எடுத்தல்,பொங்கல் வைத்து உருண்டு கொடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்வான முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

பெண்கள் கும்மி அடித்து, அம்மன், கருப்பசாமி, காவடி, சூலாயுதம்உருவம் என பல்வேறு முளைப்பாரிகளை சுமந்து, உச்சி காளியம்மன்கோயிலிலிருந்து ராஜகாளியம்மன், விநாயகர், பேச்சிராக்கு, பாம்பாலம்மன், பதினெட்டாம்படி கருப்பசாமி, அழகுநாச்சியம்மன் கோயில்கள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். வான வேடிக்கைகள் நடந்தது.

தெற்காற்றில் முளைப்பாரிகளை வைத்து கும்மியடித்து ஆற்றில் கரைத்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement