நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு
அருப்புக்கோட்டை: பாலையம்பட்டி ஊராட்சியை அருப்புக்கோட்டை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பாலையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புறநகர் பகுதிகளான வார்டு 6 7 8 லிருந்து 15 வரையிலான பகுதிகளை அருப்புக்கோட்டை நகராட்சி உடன் இணைக்கப்பட உள்ளது.
நகராட்சியுடன் இணைத்தால் வீட்டு வரி, குடிநீர் வரி அதிகளவில் உயரும். கட்டட அனுமதி கட்டணம் பல மடங்கு உயரும். குப்பை வரி செலுத்த வேண்டும். பத்திரப்பதிவு கட்டணம், சேவை வரிகள் உயரும் இதனால் இங்கு வசிக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சிரமப்படுவர்.
இதை கண்டித்து ஊராட்சி பகுதியை நகராட்சி உடன் இணைப்பதை கண்டித்து அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement