பரமக்குடியில் கிராம தலைவர்கள் போலீசார் கலந்தாய்வு கூட்டம்
பரமக்குடி: பரமக்குடி தாலுகா போலீசார் சார்பில் கிராமம் தோறும் சி.சி.டி.வி., கேமராக்கள் அமைக்கும் வகையில் கிராம தலைவர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
பரமக்குடி டி.எஸ்.பி., சபரிநாதன் தலைமை வகித்தார். பரமக்குடி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது குற்றங்களை தடுக்கும் வகையிலும், குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் வகையிலும் நகரில் முக்கியமான இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கிராமப்புறங்களில் விழிப்புணர்வு குறைவாக காணப்படுகிறது.
எனவே ஒவ்வொரு முக்கிய பகுதிகளும் கேமராக்களை பொருத்த தன்னார்வலர்கள், பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றனர். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. போலீசார் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement