நிவாரணம் கேட்டு மனு
சிவகங்கை: இளையான்குடி அருகேயுள்ள இண்டங்குளம் அர்ச்சுணன். இவர் காரைக்குடி அருகே பள்ளத்துார் டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனையாளராக இருந்தார்.
2023 மார்ச் 3 ம் தேதி இரவு கடையில் பணியில் இருந்த போது, மர்ம நபர்கள் டாஸ்மாக் மதுக்கடைக்குள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் காயமுற்ற அர்ச்சுணன் மதுரை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி, மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித்தை, தன் குழந்தைகளுடன் கிருஷ்ண வேணி சந்தித்து மனு அளித்தார்.
அதில், தனது கணவர் இறப்பிற்கு அரசு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் தனக்கு கிராம உதவியாளர் பணி வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி, பரிசீலனை செய்வதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement