மாதாந்திர மின்கட்டண கணக்கீடு! அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன விஷயம்

2

சென்னை; தமிழகத்தில் மாதாந்திர மின் கட்டணம் எப்போது கணக்கிடப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டசபையில் பதில் அளித்துள்ளார்.



தமிழக சட்டசபையில் இன்று (ஜன.10) கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது மாதாந்திர மின்கட்டணம் எப்போது முதல் கணக்கிடப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பினார்.


அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்ததாவது; நாட்டிலேயே தமிழகத்தில் தான் மின்கட்டணம் மிக குறைவாக வசூலிக்கப்படுகிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டதும் மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைப்படுத்தப்படும்.


ஏழைகளின் நலன்காக்கும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மாதம் ஒரு முறை மின்கட்டணம் என்ற தி.மு.க., வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

Advertisement