யூகி பாம்ப்ரி ஜோடி ஏமாற்றம்
ஆக்லாந்து: ஆக்லாந்து ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் ஆல்பானோ ஒலிவெட்டி ஜோடி தோல்வியடைந்தது.
நியூசிலாந்தில், ஏ.டி.பி., ஆக்லாந்து ஓபன் கிளாசிக் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் ஆல்பானோ ஒலிவெட்டி ஜோடி, குரோஷியாவின் நிகோலா மெக்டிக், நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றிய பாம்ப்ரி, ஆல்பானோ ஜோடி, இரண்டாவது செட்டை 1-6 என இழந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 'சூப்பர் டை பிரேக்கரில்' மீண்டும் ஏமாற்றிய இந்தியா, பிரான்ஸ் ஜோடி 5-10 எனக் கோட்டைவிட்டது.
ஒரு மணி நேரம், 11 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய பாம்ப்ரி, ஆல்பானோ ஜோடி 6-3, 1-6, 5-10 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement