அப்பாஸ் கல்சுரல் கலை விழா துவக்கம்
சென்னை, 'அப்பாஸ்' கல்சுரல் வழங்கும், ஸ்ரீராம் பிராப்பர்டீஸ், 33ம் ஆண்டு கலை விழா, சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் இன்று துவங்குகிறது.
வரும் 18ம் தேதி வரை, மதியம் 2:00 மணி, மாலை 4:00 மணி மற்றும் இரவு 7:00 மணி என, மூன்று நிகழ்வுகளாக கச்சேரி நடக்கிறது.
இந்த விழாவில் முன்னணி கர்நாடக சங்கீத கலைஞர்களான சுதா ரகுநாதன், நித்யஸ்ரீ மகாதேவன், ராஜேஷ் வைத்யா, உன்னிகிருஷ்ணன் - உத்ரா, சூர்ய காயத்ரி, ரஞ்சனி - காயத்ரி, சிவஸ்ஸ்ரீ ஸ்கந்தபிரசாத், அபிஷேக் - ரகுராம், சின்மயி, ஷ்ரவன், சாய் விக்னேஷ், ஜனனி மற்றும் விசாகா ஹரி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
திரை இசை பாடகர்களான எஸ்.பி.பி.சரண் -- பிரியங்கா ஆகியோரின் பிரம்மாண்டமான கச்சேரி, யு.கே.முரளி குழுவினரின் பக்தி இசை உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
விழாவிற்கான டிக்கெட்டுகள் 'புக் மை ஷோ' இணையதளத்தில் பதிவு செய்து பெறலாம். விபரங்களுக்கு 97106 33633 என்ற எண்ணை அழைக்கலாம். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, அப்பாஸ் கார்த்திக் கவனித்து வருகிறார்.