பைக் கவிழ்ந்து மூதாட்டி பலி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த ஆனந்தபுரத்தை சேர்ந்தவர் மூதாட்டி தமிழ்-மணி, 63. கடந்த, 7ல், இவர் கங்கோஜிகொத்துார் அருகே உள்ள, சிந்தகும்மனப்பள்ளியை சேர்ந்த கோவிந்தராஜ், 22, என்பவ-ருடன் ஸ்பிளண்டர் பைக்கில் சென்றுள்ளார்.

குந்தாரப்பள்ளி அருகே குருபரப்பள்ளி - நெடுஞ்சாலை ரோட்டில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த தமிழ்மணி, தர்மபுரி அரசு மருத்துவ-மனையில் சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று முன்தினம் இறந்தார்.குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement