மாநில வாலிபால் போட்டி ஓசூர் அணி மூன்றாமிடம்

ஓசூர்: ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், மாநில அள-விலான வாலிபால் போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற, ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் அணியும், சென்னை அணியும் மூன்றாமிடத்திற்கு மோதின.

இதில், 25-19, 25-16 என்ற நேர் செட்கணக்கில், ஓசூர் அரசு பெண்கள் மேல்நி-லைப்பள்ளி அணி வெற்றி பெற்று மூன்றாமிடம் பெற்றது. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, வெண்கல பதக்கம் மற்றும் சான்-றிதழ்கள் வழங்கப்பட்டன. பயிற்சியாளர் மாணிக்கவாசகம் மாண-வியரை பாராட்டினார்.

Advertisement