'காதல்' பட நடிகர் மீது துணை நடிகை புகார்

வடபழனி,வடபழனியைச் சேர்ந்தவர் 36 வயது பெண்; துணை நடிகை. இவர் கணவரை பிரிந்து, இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், மதுரவாயல், கிருஷ்ணா நகரைச் சேர்ந்த துணை நடிகர் சுகுமார், 47, என்பவர் அறிமுகமானார். இவர், பரத் நடிப்பில் வெளி வந்த 'காதல்' திரைப்படத்தில் துணை நடிகராக நடித்துள்ளார்.

இவர், துணை நடிகையிடம் நண்பராக பழகி, தனக்கு விவாகரத்து ஆகிவிட்டதாக கூறி, கணவன் மனைவியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், சுகுமார் கேட்டபோது, பல முறை நகை மற்றும் பணம் அளித்துள்ளார். இந்த நிலையில், சுகுமார் அப்பெண்ணின் மொபைல் போன் எண்ணை 'பிளாக்' செய்துள்ளார்.

இதையடுத்து, சுகுமார் குறித்து அப்பெண் விசாரித்தார். அதில், அவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது தெரியவந்தது.

இதையடுத்து, தன்னை ஏமாற்றிய சுகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement