ஊரக வளர்ச்சி துறையினர்ஒரு மணி நேர ஆர்ப்பாட்டம்
சேலம்,: சேலம் மாவட்டத்தில், மாதம் இருமுறை நேரடி ஆய்வு கூட்டத்தையும், வாரம் ஒருமுறை வீடியோ கான்பரன்ஸ் ஆய்வு கூட்டத்தையும் வேலை நேரத்தில் நடத்த வேண்டும்; உள்ளாட்சி நிர்வாகத்தில் தனி அலுவலர் பணியேற்புக்கு முன், அனைத்து நிலையிலும் விருப்ப மாறுதல் மற்றும் பணி விதியின் கீழ் மாறுதலை கலந்தாய்வு முறையில் நடத்தக்கோரி, ஊரக வளர்ச்சித்துறையினர், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு ஒரு மணி நேரம் பணியை புறக்கணித்தனர்.
சேலம் ஒன்றிய அலுவலகத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் வடிவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆத்துார் ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட தலைவர் செந்தில் தலைமையில் அலுவலர்கள், பணியாளர்கள், கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனர். தொடர்ந்து மாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் காடையாம்பட்டி ஒன்றிய அலுவலகம் முன், மாவட்ட செயலர் ஜான்; அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய அலுவலகம் முன், மாநில துணைத்தலைவர் திருவேரங்கன் தலைமையில் ஆர்ப்பாட்டம்
நடந்தது.மாவட்டத்தில், 20 ஒன்றியங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.