மதுபான கடைகளுக்கு விடுமுறை: கலெக்டர்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், இந்த மாதத்தில் இரண்டு நாட்கள் மது-பான கடைகளுக்கு விடுமுறை என, மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில், வரும், 15 திருவள்ளுவர் தினம், 26 குடி-யரசு தினம் ஆகிய இரண்டு நாட்கள் மதுபான கடைகள் திறக்க கூடாது. இதில், தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள், உரிமம் பெற்ற தனியார் ஓட்டல் பார்கள், முன்னாள் படை வீரர் மதுவிற்பனை கூடம் அனைத்தும் மூடப்பட வேண்டும்.


வரும் ஜன., 14 இரவு, 10:00 மணி முதல், 16 மதியம், 12:00 மணி வரையிலும், 25 இரவு, 10:00 மணி முதல், 27 மதியம், 12:00 மணி வரை மதுபானங்கள் விற்பனையின்றி மூடி வைக்க வேண்டும். மீறி எவரேனும், செயல்பட்டாலோ அல்லது கள்ளத்த-னமாக மது விற்பனை செய்தாலோ அவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement