அரசாணையை ரத்து செய்யக்கோரி பாலக்கோட்டில் ஆர்ப்பாட்டம்

பாலக்கோடு: ஜெர்தலாவ் பஞ்சாயத்தை, பாலக்கோடு பேரூராட்சியுடன் இணைக்க, கடந்த வாரம் தமிழக அரசு அரசாணை வெளியிட்-டது. இதை கண்டித்து, சிக்கார்தனஹள்ளி மந்திரிகவுண்டர் மாரி-யப்பன் தலைமையில், பாலக்கோடு சர்க்கரை ஆலை முன் ஆர்ப்-பாட்டம் நடந்தது.


ஜெர்தலாவ், கோடியூர், திம்மம்பட்டி, சிக்கார்தனஹள்ளி, மணிய-காரன் கொட்டாய், மாக்கன் கொட்டாய், எண்டப்பட்டி, கணபதி கொட்டாய், செங்கோடப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேரூராட்சியுடன் கிராமங்களை இணைப்பதால், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணி, வீட்டு வரி உயர்வு மற்றும் பல்வேறு வாழ்வாதார பிரச்னைகள் ஏற்படும் என, கோஷமிட்டனர்.
முன்னாள் எம்.எல்.ஏ., மாதப்பன், கவுன்சிலர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement