கிணற்றில் விழுந்த மூன்று காட்டெருமைகள் மீட்பு
பாலக்கோடு ; பாலக்கோடு அருகே, கிணற்றில் தவறி விழுந்த மூன்று -காட்டெ-ருமைகளை வனத்துறையினர் மீட்டனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மாரண்டஹள்ளி சுற்று-வட்டார பகுதிகளான அத்திமுட்லு காப்புக்காடு, மொரப்பூர் காப்-புக்காடு, தேவர்காடு உள்ளிட்ட வனப்பகுதிகளில் இருந்து, உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து, அடிக்கடி விளை நிலங்களை சேதப்படுத்துவது வழக்கம். மேலும் மின்வேலி மற்றும் கிணற்றில் விழுந்து உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை, மாரண்டஹள்ளி அடுத்த நல்லாம்-பட்டியை சேர்ந்த விவசாயி சிவன் என்பவரின் தோட்டத்தில் இருந்த, 30 அடி ஆழமுள்ள கிணற்றில், 5 வயதுடைய மூன்று காட்டெருமைகள் விழுந்தன.
பின்னர் பாலக்கோடு வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையின-ருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த வனத்துறையினர் பொக்லைன் மூலம், கிணற்றின் பக்கவாட்டில் பள்ளம் தோண்டி, 7 மணி நேரத்திற்கு பின், காட்டெருமைகளை மீட்டு, வனப்பகு-திக்குள் விரட்டினர்.