நுாறு நாள் வேலைத்திட்ட தொழிலாளர் கோபி சப்-கலெக்டரிடம் முறையீடு

கோபி: நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம் தலைமையில், நுாற்றுக்கும் மேற்-பட்டோர், கோபி சப்-கலெக்டர் ஆபீசில் நேற்று குவிந்தனர்.


பஞ்சாயத்துக்களை, நகராட்சியுடன் இணைக்கும் உத்தேச அர-சாணையை திரும்ப பெற வலியுறுத்தி, கோபி சப்-கலெக்டர் சிவானந்தத்தை சந்தித்து, கோரிக்கை மனு கொடுத்தனர்.புன்செய் புளியம்பட்டி நகராட்சியுடன், நல்லுார் - நொச்சிக்-குட்டை பஞ்சாயத்தை இணைப்பது குறித்தும், அக்கரை கொடி-வேரி பஞ்சாயத்தை, பெரிய கொடிவேரி டவுன் பஞ்சாயத்துடன் இணைப்பது குறித்தும், வெள்ளாளபாளையம், மொடச்சூர், பாரியூர், குள்ளம்பாளையம் ஆகிய பஞ்சாயத்துக்களை, கோபி நகராட்சியுடன் இணைப்பது குறித்தும், படவல்கால்வாய் பஞ்சா-யத்தை, அம்மாபேட்டை பேரூராட்சியுடன் இணைப்பது குறித்த அரசின் முடிவால், கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரமாக விளங்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்-டத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும். விவசாயத்தை பெரும்பான்மையோரின் வாழ்வாதாரமாக கொண்டு, கிராமத்தன்-மையோடு உள்ள பகுதிகளை செயற்கையாக நகரப்பகுதிகளாக அறிவிக்க கூடாது. அரசின் முடிவை கைவிடவும் வலியுறுத்தினர். மாவட்ட நிர்வாக கவனத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவிக்-கவே, கலைந்து சென்றனர்.

Advertisement