கைத்தறி ரக ஒதுக்கீடு சட்ட விழிப்புணர்வு கூட்டம்
சென்னிமலை: சென்னிமலை அருகே மேலப்பாளையத்தில், விசைத்தறி உரி-மையாளர்களுக்கு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் குறித்து விழிப்பு-ணர்வு கூட்டம் நடந்தது. சென்னிமலை வட்டார விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் பொன். ஈஸ்வர் மூர்த்தி தலைமை வகித்தார். சங்க நிர்வாகி சவுந்திரராஜன் வரவேற்றார். கைத்தறி ஆய்வாளர் தேவி, சங்க நிர்வாகி பொன்னுசாமி முன்னிலை வகித்தனர்.
ஈரோடு மாவட்ட கைத்தறி ரக ஒதுக்கீடு துறை உதவி அமலாக்க அலுவலர் ஜெய்வேல் கணேசன், கைத்தறி துணி ரகங்களின் மாதி-ரிகளை காண்பித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஆய்வின் போது கைத்தறி ரகங்கள் விசைத்தறியில் உற்பத்தி செய்யப்படு-வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர் மீது நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement