சாலை பணியாளர்கள் நுாதன போராட்டம்

தாராபுரம்: மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்-ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பில், தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவ-லகம் முன் நேற்று போராட்டம் நடந்தது.


மாநில தலைவர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். இதில் தலையில் முக்காடு அணிந்தபடி, ஒப்பாரி வைத்து, நுாதன முறையில் சாலைப்பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement