குற்ற தடுப்பு நடவடிக்கை குறித்து எஸ்.பி., தலைமையில் ஆய்வு
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு எஸ்.பி., சரவணன் தலைமை வகித்து, காவல் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து, ஆலோசனை வழங்கினார்.
இக்கலந்தாய்வு கூட்டத்தில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள குற்ற தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் நிலை குறித்தும், கள்ளசாராயம், போதை பொருள் நடமாட்டம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், புலன் விசாரணை முடியாமல் உள்ள வழக்குகளை விரைவாக புலன் விசாரணை செய்து முடிக்கவும், போதை பொருள் நடமாட்டத்தை தடுக்கவும், தொடர்ந்து சாலை பாதுகாப்பு குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், விழிப்புணர்வு செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில், கூடுதல் எஸ்.பி., திருமால், ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார்குப்தா மற்றும் டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.