' களஞ்சியம்' செயலியில் விடுப்பு எடுப்பதில் குளறுபடி; தொடக்க கல்வி ஆசிரியர்கள் தவிப்பு

சிவகங்கை : விடுமுறையை 'களஞ்சியம்' செயலியில் விண்ணப்பிக்க முடியாமல் குளறுபடி ஏற்பட்டுள்ளது என ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

கல்வித்துறையின் 'எமிஸ்' செயலியில் ஆசிரியர்கள் விடுமுறைக்கு விண்ணப்பிக்கும் போது தற்செயல் விடுப்பு எடுக்கும் போது அப்பள்ளி தலைமை ஆசிரியரின் அனுமதிக்கு செல்லும். அதே போன்று மருத்துவ, ஈட்டிய விடுப்பு விண்ணப்பித்தால், அந்தந்த வட்டார கல்வி அலுவலரின் ஒப்புதலுக்கு செல்லும்.

2025 ஜன., 1 முதல் ஆசிரியர்கள் விடுமுறையை 'களஞ்சியம்' செயலி மூலம் அவரவர் அலைபேசி வழியாக விண்ணப்பிக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இச்செயலியில் தற்போது தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் தற்செயல், மருத்துவம், ஈட்டிய விடுப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த விடுப்பு அனுமதியை பெற அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் பெயர் தான் செயலியில் இடம் பெற வேண்டும். ஆனால், களஞ்சியம் செயலியில் குளறுபடி ஏற்படுத்தும் விதத்தில் விடுமுறை கோரி ஆசிரியர்கள், களஞ்சியம் செயலியில் விண்ணப்பித்தால், அந்தந்த வட்டார கல்வி அலுவலகத்தின் இளநிலை உதவியாளர் அனுமதிக்காக என செயலியில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் உரிய நேரத்தில் விடுமுறைக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

Advertisement