சிவகங்கையில் சமத்துவ பொங்கல் விழா

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகம், பள்ளி, கல்லுாரிகளில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் பொங்கல் கொண்டாடினர். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) முத்துகழுவன் உட்பட வருவாய்துறை அலுவலர், ஊழியர்கள் பங்கேற்றனர்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் பொங்கல் கொண்டாடினர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வானதி, மகளிர் திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் கேசவதாசன், உதவி திட்ட அலுவலர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

* சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரியில் மாணவர்கள் பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாடினர். மருத்துவ கல்லுாரி டீன் சத்தியபாமா தலைமை வகித்தார். உதவி நிலைய மருத்துவ அலுவலர்கள் முகமது ரபி, தென்றல், கல்லுாரி துணை முதல்வர், துறை தலைவர், பேராசிரியர், மாணவர்கள் பங்கேற்றனர். மருத்துவ கல்லுாரி, மருத்துவமனை அலுவலகங்களிலும் பொங்கல் கொண்டாடினர்.

* சிவகங்கை எஸ்.பி., அலுவலகத்தில் அமைச்சு பணியாளர்களும், பொதுப்பணித்துறை அலுவலகம் முன் அலுவலர்கள், ஊழியர்கள் சமத்துவ பொங்கல் வைத்து வழிபட்டனர்.

* சிவகங்கை மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜோதிலட்சுமி தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் ராஜசேகரன், அலுவலக கண்காணிப்பாளர்கள் பட்டாபி நாகராஜன், குமார் உட்பட அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

* சிவகங்கை அரு.நடேசன் செட்டியார் நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. ஆசிரியை ரேவதி வரவேற்றார். மாணவிகளுக்கு கோலப்போட்டி நடத்தி பரிசளித்தனர்.

Advertisement