பூட்டிய வீட்டில் திடீர் தீ விபத்து ரூ.6 லட்சம் ரொக்கம் எரிந்து சேதம்

நெய்வேலி : வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மகளின் மருத்தவ படிப்பு செலவிற்கு வைத்திருந்த ரூ. 6 லட்சம் ரொக்கம் உட்பட வீட்டு உபயோகப் பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது.


நெய்வேலி ஆர்ச்கேட் எதிரே உள்ள சக்தி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம்,50; பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். நேற்று மாலை ஆறுமுகம் வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்துடன் வௌியே சென்றார்.

இந்நிலையில் மாலை 4.30 மணிக்கும் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து சென்ற குறிஞ்சிப்பாடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

ஆனால், அதற்குள் வீட்டில் இருந்த பிரிட்ஜ், வாஷிங் மெஷின், பீரோ மற்றும் மகளின் மருத்துவ படிப்பிற்காக வைத்திருந்த ரூ.6 லட்சம் பணம் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது.

இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிந்து , தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement