தண்ணீரில் கோலமிட்டு மாணவிகள் அசத்தல்

ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணிஅரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தபொங்கல் கொண்டாட்டத்தில் ஆறாம்வகுப்பு மாணவிகள் தண்ணீரில் கோலம் வரைந்தனர். பழங்கால தமிழி எழுத்துகளில் பொங்கல் வாழ்த்தும் எழுதினர்.

ஒரு பெரிய தாம்பூல தட்டில் மணல் பரப்பி அதன் மேல் கோலம் வரைந்து மெழுகை சிறு சிறு துகள்களாக செதுக்கி அதன் மேல் பரப்பி பின்பு தாம்பாள தட்டை சூடு படுத்தினர். மெழுகு உருகி உருவான படலம் மீது தண்ணீரை ஊற்றிய போது கோலம் தண்ணீரில் மிதந்தது.

இப்பள்ளியின் தொன்மை பாதுகாப்பு மன்ற செயலர் வே.ராஜகுரு ஏற்பாட்டில் 9ம் வகுப்பு மாணவர்கள் பழங்கால தமிழி கல்வெட்டு எழுத்துக்களில் 'இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்து' என எழுதினர். இடைநிலை ஆசிரியர் தமயந்தியின் மேற்பார்வையில் மாணவிகள் சுபாஸ்ரீ, செல்வபிரீத்தி, தனுஸ்ரீ, விசாலினி ஆகியோர் இக்கோலத்தை வரைந்தனர்.

சாதித்த மாணவர்களை பள்ளிதலைமையாசிரியர் மகேந்திரன் கண்ணன், ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement