நுாற்றாண்டு பழமையான மலை ரயில் பணிமனையில் பொங்கல் கொண்டாட்டம்

குன்னுார் : குன்னுார் நுாற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயில் பணிமனையில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

குன்னுார்- ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் நுாற்றாண்டு காலமாக இயக்கப்பட்டு வருகிறது. இதன் இன்ஜின்கள் குன்னுார் ரயில் நிலையத்தில் உள்ள பணிமனையில், பராமரிக்கப்பட்டு வருகிறது.

இங்கு ஆண்டு தோறும் பொங்கல் திருவிழா, பணிமனை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சார்பில் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் நேற்று ரயில்வே பணிமனை முன்பு பணியாளர்கள் அனைவரும், வண்ண கோலமிட்டு, பொங்கல் வைத்து பூஜைகள் நடத்தினர். 'பொங்கலோ, பொங்கல்' என, அனைவரும் தெரிவித்து, பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

Advertisement