'சூட்டிங்' மட்டம் பகுதியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம்

ஊட்டி, : ஊட்டி சூட்டிங் மட்டம் பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

ஊட்டி கூடலூர் சாலையில் அமைந்துள்ள, சூட்டிங் மட்டம் பகுதி, இயற்கை சூழ்ந்து காணப்படுகிறது. இப்பகுதி, சினிமா படபிடிப்புக்கு உகந்த இடமாக காணப்படுகிறது.

ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பசுமையாக காட்சி அளிக்கும் புல்வெளியை கண்டுக்களிக்கின்றனர். குழந்தைகள் புல்வெளியில் மகிழ்ச்சியுடன் சறுக்கி விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில், ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பனிப்பொவு நிலவி வருகிறது. அதிகாலை நேரத்தில், கடும் குளிர் நிலவுகிறது. சூரிய வெளிச்சத்தில், புல்வெளியில் படர்ந்த பனி மற்றும் மேகமூட்டம் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

இதனை கண்டு களிப்பதற்காக, சுற்றுலா பயணிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலை நேரத்தில், சூட்டிங் மட்டம் பகுதிக்கு வந்து இயற்கையுடன் இணைந்து ' செல்பி' எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

Advertisement