அதிகம் சம்பாதித்த குகேஷ்
புதுடில்லி: உலக செஸ் நட்சத்திரங்கள் கடந்த 2024ம் ஆண்டு சம்பாதித்த பரிசுத் தொகை விபரங்களை 'செஸ்.காம்' என்ற இணையதளம் வெளியிட்டது. இதன் படி, 18 வயதில் இளம் உலக சாம்பியன் ஆன இந்தியாவின் குகேஷ், அதிகம் சம்பாதித்தவர்களில் முதலிடத்தில் உள்ளார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் வென்ற ரூ. 8.62 கோடி உட்பட, மொத்தம் பங்கேற்ற 8 தொடரில், குகேஷ் ரூ. 13.60 கோடி சம்பாதித்துள்ளார். சீனாவின் டிங் லிரென், 5 தொடர்களில் ரூ. 10.20 கோடி சம்பாதித்து, இப்பட்டியலில் இரண்டாவதாக உள்ளார். ஐந்து முறை உலக சாம்பியன் ஆன நார்வேயின் கார்ல்சன் (ரூ. 5.46 கோடி), நான்காவது இடம் பிடித்தார்.
இந்தியாவின் பிரக்ஞானந்தா, 11 தொடர்களில் ரூ. 1.74 கோடி சம்பாதித்து, 'டாப்-10' பட்டியலில் இடம் பிடித்தார். இவர் 9வது இடம் பெற்றார். இந்தியாவின் மற்ற நட்சத்திரங்கள் கொனேரு ஹம்பி (ரூ. 1.06 கோடி, 13வது இடம்), அர்ஜுன் (1.03 கோடி, 15வது) என இருவரும் 'டாப்-15' பட்டியலில் இடம் பெற்றனர்.
'டாப்-5' யாரு
அதிகம் சம்பாதித்த 'டாப்-5' செஸ் நட்சத்திரங்கள் விபரம்:
வீரர்/நாடு பரிசுத் தொகை
குகேஷ்/இந்தியா ரூ. 13.60 கோடி
லிரென்/சீனா ரூ. 10.20 கோடி
அலிரேசா/பிரான்ஸ் ரூ. 5.51 கோடி
கார்ல்சன்/நார்வே ரூ. 5.46 கோடி
காருணா/அமெரிக்கா ரூ. 3.93 கோடி
* இந்தியாவின் பிரக்ஞானந்தா (ரூ. 1.74 கோடி) 9வது, ஹம்பி (ரூ. 1.06 கோடி) 13, அர்ஜுன் (1.03 கோடி) 15வதாக உள்ளனர்.