கால்பந்து: நீடா கலக்கல்

புதுடில்லி: ஐ.டபிள்யு.எல்., லீக் போட்டியில் ஒடிசாவின் நீடா அணி 1-0 என டில்லியை வீழ்த்தியது.
இந்தியாவில் பெண்களுக்கான கால்பந்து லீக் தொடர் 8 வது சீசன் நடக்கிறது. தமிழகத்தின் மதுரையை சேர்ந்து சேது, நடப்பு சாம்பியன் ஒடிசா, கோல்கட்டாவின் ஈஸ்ட் பெங்கால் உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.
நேற்று நடந்த டில்லியில் நடந்த லீக் போட்டியில் இத்தொடரின் அறிமுக அணியான நீடா, டில்லியின் ஹாப்ஸ் அணியை எதிர்கொண்டது. 80 வது நிமிடத்தில் நீடா அணியின் கிப்டி ஒரு கோல் அடிக்க, 1-0 என வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் மதுரையின் சேது, ஸ்ரீபூமி அணிகள் மோதின. இரண்டாவது பாதியில் போட்டியின் 60 வது நிமிடத்தில் சேது வீராங்கனை அம்னா நபாபி ஒரு கோல் அடித்தார். முடிவில் சேது அணி இத்தொடரில் முதல் போட்டியில் வெற்றியை பதிவு செய்தது.

Advertisement