கும்மிடியில் கால்வாயையொட்டி நடைபாதை தடுப்பு அமைக்க கோரிக்கை

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், 22 கிலோ மீட்டர் துார சாலைகள் உள்ளன. சாலையையொட்டி நடைபாதையும், அதன் அருகே மழைநீர் வடிகால்வாயும் அமைக்கப்பட்டுள்ளன.

பல இடங்களில், மழைநீர் கால்வாய்க்கும், நடைபாதைக்கும் இடையே போதிய அளவில் இடைவெளி உள்ளன.

ஆனால், சில இடங்களில் மட்டும், கால்வாயை ஒட்டி, நடைபாதை இருப்பதால், பாதசாரிகள் தவறி விழும் சூழல்நிலவுகிறது.

குறிப்பாக, மொபைல்போன் பார்த்துக்கொண்டு நடக்கும் பாதசாரிகள், கவன குறைவாக கால்வாயில் தவறி விழுவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதசாரிகள் பாதுகாப்பு கருதி, கால்வாய்க்கும் நடைபாதைக்கும் இடையே தடுப்பு ஏற்படுத்த வேண்டும்.

அதற்கு, கும்மிடிப்பூண்டி சிப்காட் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Advertisement