பேதையை தாக்கிய 'போதை'க்கு காப்பு
பேதையை தாக்கிய 'போதை'க்கு காப்பு
பவானி,: பவானி அருகே ஊராட்சிகோட்டை, ஜீவா நகரை சேர்ந்த துளசிமணி மனைவி செல்வி, 42; இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். ஆறு மாதங்களுக்கு முன் சாலை விபத்தில் துளசிமணி உயிரிழந்தார்.
கடந்த, 6ம் தேதி அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி நாகப்பன், 42; குடிபோதையில் செல்வியிடம் தகராறு செய்து தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செல்வி, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்ந்து, புகார் செய்தார். விசாரித்த பவானி போலீசார், வன்கொடுமை தடுப்பு பிரிவில் வழக்குப்பதிந்து நாகப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement