அச்சு வெல்லம் விலை உயர்வு
அச்சு வெல்லம் விலை உயர்வு
ஈரோடு: ஈரோடு அடுத்த சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று, 30 கிலோ எடை கொண்ட, 2,600 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தாகி ஒரு மூட்டை, 1,200 ரூபாய் முதல், 1,360 ரூபாய் வரை விற்பனையானது. உருண்டை வெல்லம், 2,050 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,350 ரூபாய் முதல், 1,460 ரூபாய்; அச்சு வெல்லம், 150 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,460 ரூபாய் முதல், 1,520 ரூபாய் வரை விற்பனையானது.
கடந்த வாரத்தை விட நாட்டு சர்க்கரை உட்பட மூன்றும், வரத்து குறைந்தது. அதேசமயம் அச்சு வெல்லம் மூட்டைக்கு, 90 ரூபாய், உருண்டை வெல்லம் மூட்டைக்கு, 60 ரூபாயும் விலை உயர்ந்தது. நாட்டு சர்க்கரை விலையில் மாற்றம் இல்லை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement