சித்தோடு அருகே ஆண் சடலம்: மனைவி கொன்றது அம்பலம்



சித்தோடு அருகே ஆண் சடலம்: மனைவி கொன்றது அம்பலம்

பவானி, : பவானி அடுத்த சித்தோடு தேசிய நெடுஞ்சாலை சாக்கடை வடிகால் கல்வெட்டு பகுதியில், ரத்த காயங்களுடன் கடந்த, 6ம் தேதி ஆண் சடலம் கிடந்தது. சித்தோடு போலீசார் கைப்பற்றி விசாரித்தனர். இதில் சேலம், பள்ளப்பட்டியை சேர்ந்த சீனிவாசன், ௪௦, என்பதும், அவரது மனைவி உமா மகேஸ்வரி, ஆள் வைத்து கொலை செய்ததும் தெரியவந்தது.
கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள பெற்றோர் வீட்டில் நான்கு ஆண்டுகளாக வசிக்கிறார். கடந்த, 5ம் தேதி குழந்தைகளை பார்க்க சென்ற சீனிவாசனுக்கும், மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த உமா மகேஸ்வரி, ஆட்களை ஏவி சீனிவாசனை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பிறகு வாகனத்தில் ஏற்றிவந்து, சித்தோடு அருகே வீசி சென்றுள்ளார். இதுதொடர்பாக அவினாசி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும், போலீசார் தெரிவித்தனர்.

Advertisement