மொபைல் சிக்னலின்றி கிராம மக்கள் அவதி

மொபைல் சிக்னலின்றி கிராம மக்கள் அவதி


அரூர், : அரூர் அடுத்த வள்ளிமதுரை, வாழைத்தோட்டம், தோல்துாக்கி, தாதராவலசை ஆகிய கிராமங்களில், மொபைல்போன் டவர் இல்லாததால், அங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள் மொபைல்போன் பயன்படுத்த முடியாத சூழல் நிலவியது. அவர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த சில மாதங்களுக்கு முன் மொபைல்போன் டவர் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், மொபைல் போனுக்கு சிக்னல் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். இதனால், இ-மெயில், வாட்ஸ் ஆப் உள்ளிட்டசமூக வலைத்தளங்கள் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட
அவசர தேவைகள் போன்றவற்றுக்கு மொபைல்போனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

Advertisement