பெருமாள் கோவில்களில் துவாதசி வழிபாடு ஆண்டாளுக்கு கூடாரவல்லி உற்சவம்

பெருமாள் கோவில்களில் துவாதசி வழிபாடு ஆண்டாளுக்கு கூடாரவல்லி உற்சவம்


தர்மபுரி,: தர்மபுரியிலுள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று முன்தினம் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நடந்தது-. நேற்று, துவாதசியை முன்னிட்டு, கூடாரவல்லி உற்சவ விழா, பழைய தர்மபுரி வரதகுப்பம் வெங்கடரமண சுவாமி கோவிலில் நடந்தது. இதில், பெருமாள், ஆண்டாள் உற்சவர்
களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைக்கு பின், சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இந்நாளில் ஆண்டாளை தரிசித்தால் மனம் போல் மாங்கல்யம் அமையும், பிரிந்த தம்பதியர் கூடுவர் என்பது ஐதீகம். பெருமாளுக்கு அக்காரவடிசல் படையலிட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
தர்மபுரி கோட்டை வரமகாலட்சுமி உடனாகிய பரவாசுதேவ பெருமாள் கோவிலில், பரவாசுதேவ பெருமாளுக்கும், ஆண்டாள் நாச்சியாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பின்னர் கருட வாகன உற்சவம் நடந்தது. குமாரசாமிப்பேட்டை ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோவிலில், தங்க கருட வாகனத்தில் சுவாமி தங்கக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
அதேபோல், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில், சோகத்துார் திம்மராய பெருமாள் கோவில், செட்டிக்கரை பெருமாள் கோவில், இலக்கியம்பட்டி நித்திய கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில், அதகபாடி லட்சுமி நாராயணசாமி கோவில், அலேபுரம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்
களிலும் துவாதசியை முன்னிட்டு, கூடாரவல்லி விழா சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.

Advertisement