சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு



சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

தர்மபுரி, : சனி பிரதோஷத்தையொட்டி, தர்மபுரி மாவட்டத்திலுள்ள பல்வேறு சிவன் கோவில்களில், நேற்று சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடந்தன.
அதன்படி, தர்மபுரி நெசவாளர் காலனி மஹாலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் மற்றும் பிரகாரத்திலுள்ள நந்திக்கு, நேற்று மாலை பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூவேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், மொடக்கோரி சிவசக்தி சித்தர் பீடம் கோவில், எஸ்.வி., ரோடு ஆதிசிவன் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர் கோவில், இண்டூர் மரகாதாம்பிகை சமேத ஈஸ்வரன் கோவில், கீழ்பூரிக்கல் பெரியநாயகி உடனமர் கைலாசநாதர் கோவில் உள்பட, மாவட்டத்திலுள்ள பல்வேறு சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
* பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் அமிர்தேஸ்வரர், அன்னை அமிர்தாம்பிகை கோவிலில், மார்கழி மாத வளர்பிறை சனி மஹா பிரதோஷத்தையொட்டி நந்தி பெருமானுக்கு, சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடந்தது.
* அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள வர்ணீஸ்வரர் கோவிலில், சுவாமிக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதேபோல், அரூர் சந்தைமேட்டிலுள்ள வாணீஸ்வரர் கோவில், பொம்மிடி அருணாச்சல ஈஸ்வரன் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், தென்கரைகோட்டை நஞ்சுண்டேஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில் ஆகியவற்றில் சிறப்பு பூஜை நடந்தது.

Advertisement