தர்மபுரி செந்தில் மெட்ரிக் பள்ளியில் பொங்கல் கலைவிழா கொண்டாட்டம்



தர்மபுரி செந்தில் மெட்ரிக் பள்ளியில் பொங்கல் கலைவிழா கொண்டாட்டம்


தர்மபுரி,: தர்மபுரி டவுன், செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, பொங்கல் கலைவிழா நேற்று கொண்டாடப்பட்டது. செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் செந்தில் கந்தசாமி தலைமை வகித்தார். துணைத்தலைவர் மணிமேகலை கந்தசாமி, செயலாளர் தனசேகர், நிர்வாக அலுவலர் ரபிக் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் வள்ளியம்மாள், துணை முதல்வர் கவிதா ஆகியோர் வரவேற்றனர். விழாவில் மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன், பொங்கல் பண்டிகையின் சிறப்பம்சங்கள் குறித்து பேசினார். விழாவையொட்டி, பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்தனர். மாணவர்கள், தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து, அனைவரையும் வரவேற்றனர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியரின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர் கலந்து கொண்டனர். மேல்நிலைப்பிரிவு முதல்வர் திருநாவுக்கரசன் நன்றி கூறினார். முன்னதாக போகிப் பண்டிகையை முன்னிட்டு, மாணவ, மாணவியர் பங்கேற்ற புகையில்லா போகி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Advertisement