அதிக நேரம் வேலை செய்யும் நாடுகள் பட்டியல்: இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

4

ஜெனிவா: அதிக நேரம் வேலை செய்பவர்கள் நாடுகளில் முதல் 10 நாடுகள் பட்டியலை சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ.,) வெளியிட்டுள்ளது.

குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தபோதிலும், பூட்டானில் உள்ள மக்கள் உலகில் அதிக வேலை நேரங்களை எடுத்து கொண்ட பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.


லார்சன் & டூப்ரோ (எல்&டி) தலைவர் எஸ்.என். சுப்ரமணியன், போட்டித்தன்மையைப் பராமரிக்க ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட வாரத்திற்கு 90 மணிநேரம் வரை வேலை செய்ய வேண்டும் என்று கூறினார். நீண்ட வேலை நேரம் குறித்த விவாதத்தை மீண்டும் துாண்டிவிட்டார்.

சமீபத்திய மாதங்களில், இன்போசிஸ் இணை நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தி மற்றும் ஷாடி.காம் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் ஷார்க் டேங்க் இந்தியா தலைவர்அனுபம் மிட்டல் உள்ளிட்ட பல இந்திய வணிகத் தலைவர்களும் இதே கருத்துக்களை எதிரொலித்துள்ளனர். ஆனால் இதுபோன்ற வேலை அட்டவணைகளின் சாத்தியக்கூறு குறித்து இந்தியா கூட்டாக விவாதிக்கும் அதே வேளையில், உலகளாவிய அதிக வேலை செய்யும் அரங்கில் இந்தியா ஏற்கனவே முன்னணியில் இருப்பதாக சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.


அதிக நேரம் வேலை செய்பவர்கள் நாடுகளில் முதல் 10 நாடுகள் பட்டியல்



முதலிடம் பெற்றுள்ள பூட்டானில் உள்ள ஊழியர்கள் வாரத்திற்கு சுமார் 54.4 மணி நேரம் வேலை செய்கிறார்கள்.

2வது இடத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பெற்றுள்ளது. இங்குள்ள ஊழியர்கள் வாரத்திற்கு 50.9 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.

3வது இடத்தில் ஆப்பிரிக்க நாடான லெசோதோ உள்ளது. இங்குள்ளவர்கள் வாரத்திற்கு 50.4 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.

4வது இடத்தில் காங்கோ உள்ளது. இங்குள்ள ஊழியர்கள் வாரத்திற்கு 48.6 மணி நேரம் வேலை செய்கிறார்கள்.

5வது இடத்தில் 48 மணி நேரம் வேலை செய்யும் பட்டியலில் கத்தார் அடுத்த இடத்தில் உள்ளது.


6வது இடத்தில் லைபீரியா உள்ளது. அங்கு ஊழியர்கள் வாரத்திற்கு 47.7 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.

7வது இடத்தை மவுரித்தேனியா பெறுகிறது, அங்கு மக்கள் வாரத்திற்கு 47.6 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.

8வது இடத்தில் லெபனான் உள்ளது. அங்கு மக்கள் வாரத்திற்கு சராசரியாக 47.6 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.

9வது இடத்தில் மங்கோலியா உள்ளது.ஊழியர்கள் வாரத்திற்கு 47.3 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.

10வது இடத்தில், ஜோர்டான் உள்ளது, அங்குள்ள மக்கள் வாரத்திற்கு சராசரியாக 47 மணி நேரம் வேலை செய்கிறார்கள்.

இதற்கிடையில், ஐ.எல்.ஓ., தரவுகளின்படி, ஒரு வேலை செய்பவருக்கு மிகக் குறைந்த சராசரி வேலை நேரங்களைக் கொண்ட நாடாக தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான வனுவாட்டு உருவெடுத்துள்ளது. வனுவாட்டுவில் ஊழியர்கள் வாரத்திற்கு சராசரியாக 24.7 மணிநேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள்.
இது பகுப்பாய்வு செய்யப்பட்ட எந்த நாடுகளிலும் மிகக் குறைவு. கிரிபாட்டி (27.3 மணிநேரம்) மற்றும் மைக்ரோனேஷியா (30.4 மணிநேரம்) போன்ற நாடுகளும் குறைந்தபட்ச கூடுதல் நேரத்துடன் தங்கள் சிறந்த வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகத் தெரிகிறது.

உலகின் அதிக வேலை செய்யும் நாடுகளில் இந்தியா 13வது இடத்தில் உள்ளது. இந்திய ஊழியர்கள் சராசரியாக ஒவ்வொரு வாரமும் 46.7 மணிநேரம் வேலை செய்கிறார்கள் என்றும், இந்திய தொழிலாளர்களில் 51சதவீதம் பேர் வாரத்திற்கு 49 அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேரம் வேலை செய்கிறார்கள் . இதன் மூலம், அதிக வேலை நேர விகிதங்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் நெதர்லாந்து தொழிலாளர்கள் வாரத்திற்கு 31.6 மணிநேரமும் நார்வேயில் 33.7 மணி நேரமும் வேலை செய்கிறார்கள்.

Advertisement