கட்சியினர் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு


கட்சியினர் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு

ஈரோடு,:கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக, மாவட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சேமிப்பு கிடங்கில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா முன்னிலையில் ஆய்வும், மாதிரி ஓட்டுப்பதிவும் நேற்று நடந்தது.
கடந்த தேர்தலில், 237 ஓட்டுச்சாவடிகளில், 480 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், 480 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 480 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இவை பெல் இன்ஜினியர்களால் சரிபார்க்கும் பணி நடந்தது. அனைத்து இயந்திரங்களும் முழு செயல்பாட்டில் உள்ளதை உறுதி செய்தனர். இதில் இருந்து 5 சதவீத இயந்திரங்களை எடுத்து, முதற்கட்ட மாதிரி ஓட்டுப்பதிவு நேற்று நடத்தினர். இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர். மாதிரி ஓட்டுப்பதிவு செய்து, எண்ணிக்கையை சரிபார்த்து, இயந்திர செயல்பாட்டை உறுதி செய்தனர். பின், 19 இயந்திரங்கள், பயிற்சி நடத்துவதற்காக தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement