லால் பகதுார் சாஸ்திரி, குமரன்நினைவு நாள் அனுசரிப்பு



லால் பகதுார் சாஸ்திரி, குமரன்நினைவு நாள் அனுசரிப்பு

ஈரோடு,:முன்னாள் பிரதமர் லால்பகதுார் சாஸ்திரி, கொடிகாத்த குமரன் நினைவு நாள், ஈரோடு மாநகர் மாவட்ட காங்., அலுவலகத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது. மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமையில் இருவரின் உருவப்படத்துக்கு, மண்டல தலைவர்கள் விஜயபாஸ்கர், ஜாபர் சாதிக், மாவட்ட துணை தலைவர் பாஸ்கர்ராஜ், வின்சென்ட், அர்சத், ஜூபைர் அகம்மது, குப்பண்ணா சந்துரு, பாஷா, கிருஷ்ணவேணி மரியாதை செலுத்தினர்.
* ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், அமைச்சர் முத்துசாமி முகாம் அலுவலகத்தில் திருப்பூர் குமரன் உருவப்படத்துக்கு, மாநில நெசவாளர் அணி சச்சிதானந்தம் முன்னிலையில், நிர்வாகிகள் சாமி, ராமசந்திரன், வீரமணி, சந்திரசேகர் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement