புகையில்லா போகிவிழிப்புணர்வு பேரணி
புகையில்லா போகிவிழிப்புணர்வு பேரணி
மல்லசமுத்திரம்,: நாளை, தமிழகம் முழுவதும் போகி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதை தொடர்ந்து, புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, டவுன் பஞ்., அலுவலகம் தொடங்கி, மல்லசமுத்திரம் பஸ் ஸ்டாண்ட் வரை விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதில், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது; போகி பண்டிகையில் டயர் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதை தவிர்ப்பது குறித்து மக்களிடையே துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. மேலும், தேவையற்ற பழைய பிளாஸ்டிக் பொருட்கள் பெறுவதற்கு ஆங்காங்கே சேகரிப்பு மையம் நிறுவப்பட்டது. தலைவர் திருமலை, துணைத்தலைவர் மனோரஞ்சிதம், இ.ஓ., மூவேந்திரபாண்டியன், அனைத்து வார்டு உறுப்பினர்கள், டவுன் பஞ்., பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement