சோலார் பேனல் பொருத்தஎலக்ட்ரீஷியன்களுக்கு பயிற்சி
சோலார் பேனல் பொருத்தஎலக்ட்ரீஷியன்களுக்கு பயிற்சி
ராசிபுரம்:மத்திய அரசு, வீடுகளுக்கு சோலார் பேனல் அமைக்க மானியம் வழங்குகிறது. ஆனால், இதை பொருத்துவதற்கு உள்ளூர் எலக்ட்ரீஷியன்களுக்கு போதுமான பயிற்சி இல்லை. எனவே, ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பயிற்சி அளிக்கும் பணியை, 'வீ தி லீடர்' பவுன்டேஷன் செய்து வருகிறது. அதன்படி, சோலார் பேனல் பொருத்துவது குறித்து ராசிபுரம் பகுதி எலக்ட்ரீஷியன்களுக்கு, ஒரு நாள் பயிற்சி முகாம் ராசிபுரத்தில், இன்று காலை நடக்கிறது.
ராசிபுரம் ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே உள்ள தனியார் பள்ளி கட்டடத்தில் பயிற்சி முகாம் நடக்கிறது. மேக் இந்தியா நிறுவன தொழில்நுட்ப வல்லுனர்கள் பயிற்சியை வழங்க உள்ளனர். இலவசமாக அளிக்கப்படும் இப்பயிற்சிக்கு வரும் நபர்களுக்கு, உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என, 'வீ தி லீடர்' பவுன்டேஷன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.