ராசிபுரத்தில் இன்று 'ஹேப்பி ஸ்டிரீட் டே'




ராசிபுரம்: சென்னை, சேலம், கோவை உள்ளிட்ட பெருநகரங்களில், 'ஹேப்பி ஸ்டிரீட் டே' கொண்டாடி வருகின்றனர். இதுபோன்ற நிகழ்ச்சி ராசிபுரம் பகுதியில் இதுவரை நடந்தது இல்லை.
ராசிபுரத்தை சேர்ந்த என்.ஆர்.எஸ்., நிறுவனம் மற்றும் எஸ்.எஸ்.எஸ்., சவுன் சிஸ்டம் ஆகியவை இணைந்து ஏற்பாடுகளை செய்து வருகிறது. ராசிபுரம் கடைவீதியில் மாலை, 6:00 முதல், இரவு, 8:00 மணி வரை இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
தற்போது, பாடல் ஒளிபரப்ப தேவையான சவுண்ட் சிஸ்டம் பொருத்துவது உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. நிகழ்சிக்கான கட்டுப்பாடுகள் குறித்து, இன்று காலை வெளியிடப்படும் எனக்கூறப்படுகிறது.
நிகழ்ச்சியில் பங்கேற்க, ராசிபுரம் நகராட்சி மட்டுமின்றி சுற்றுப்பகுதியை சேர்ந்த கல்லுாரி, பள்ளி மாணவ, மாணவியர், இளைஞர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement