டூவீலரில் சென்றவர் கீழே விழுந்து பலி
டூவீலரில் சென்றவர் கீழே விழுந்து பலி
குமாரபாளையம்,: கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் சங்கிலி, 50; இவரது நண்பர் ரமேஷ், 45; சங்கிலிக்கு குடிப்பழக்கம் இருந்ததால், கடந்த, 7 மாலை, 3:30 மணிக்கு, அவருக்கு தாயத்து கயிறு கட்ட, சங்ககிரி பூமுடி சாமி கோவிலுக்கு, ரமேஷ், 'யமஹா கிரக்ஸ்' டூவீலரில், ரமேஷ் ஓட்ட, சங்கிலி பின்னால் உட்கார்ந்து சென்றார். சேலம் - கோவை புறவழிச்சாலை, குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, நிலைதடுமாறி சங்கிலி கீழே விழுந்தார். இதில் பலத்த அடிபட்ட அவர், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று முன்தினம் மாலை, 4:15 மணிக்கு உயரிழந்தார். குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement