சோழீஸ்வரர் கோவிலில்நாளை ஆருத்ரா தரிசனம்


சோழீஸ்வரர் கோவிலில்நாளை ஆருத்ரா தரிசனம்


மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரத்தில், சோழர்காலத்தில் கட்டப்பட்ட, 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த திரிபுரசுந்தரி உடனமர் சோழீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நாளை, திருவாதிரை பெருவிழாவை முன்னிட்டு, அதிகாலை, 1:00 முதல் காலை, 6:00 மணி வரை, நடராஜர் திருமஞ்சனம், மூலவர் ஆராதனை, திருக்கல்யாண உற்சவம், ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. முன்னதாக, இன்று மாலை, 6:00 மணி முதல், 8:00 மணி வரை பக்தர்கள் விரதமிருந்து வீடுகளில் பூஜை செய்வர்.

Advertisement