கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் அறிவிப்பு

நாமக்கல்: 'வரும் 26, குடியரசு தினத்திற்கு பின், தமிழகத்தில் கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் நடத்தப்படும்' என, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி கூறினார்.


இதுகுறித்து அவர் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள தென்னை, பனை விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைப்பதற்கு, தமிழக அரசு கள்ளுக்கு விதித்துள்ள தடையை நீக்க, 2004 ஜூலை, 29ல், உயர்நீதிமன்றம் உத்தரவிட்-டது. தமிழக அரசு, டாஸ்மாக் கடை மூலம், மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மதுவிற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது. வரும், 26ல், குடியரசு தினத்திற்கு பின், தமிழ-கத்தில், கள் இறக்கி, சந்தைப்படுத்தும் போராட்டம் நடத்தப்-படும். மேலும், 2026 சட்டசபை தேர்தல் வாக்குறுதியில், தமிழ-கத்தில் உள்ள கள்ளுக்கான தடையை நீக்கி, கள்ளுக்கடை திறக்க முதல் வாக்குறுதியாகவும், முதல் கையெழுத்து போடும் கட்சிக்கு ஆதரவு அளிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement