பொன்னேரியில் ஜல்லிக்கட்டு மைதானத்தில் கலெக்டர் ஆய்வு
எருமப்பட்டி: பொங்கல் பண்டிகையையொட்டி, எருமப்பட்டி யூனியன், பொன்னேரி கைகாட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட உள்ளது. இதற்காக மைதானம் தயார் செய்யும் பணி, கடந்த, 5 நாட்களாக நடந்து வருகிறது.
இப்பணிகளை, கலெக்டர் உமா ஆய்வு செய்தார். அப்போது, ஜல்லிக்கட்டு போட்டிக்கு தேவை-யான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசாரும், ஜல்லிக்கட்டு குழு-வினரும் மேற்கொள்ள வேண்டும்; போட்டி நடத்துவதற்கான தடுப்பு வேலிகள், பாதுகாப்பு அம்சங்கள், மக்கள் அமரும் பார்-வையாளர் கேலரி, மேடை, ஜல்லிக்கட்டு காளைகளை அழைத்து வருவதற்குரிய பாதைகளுக்கான தடுப்புகள் அமைத்தல் உள்-ளிட்ட பணிகளை பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்து தகு-திச்சான்று வழங்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். நாமக்கல் ஆர்.டி.ஓ., பார்த்திபன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பழனிவேல், சேந்தமங்கலம் தாசில்தார் வெங்கடேஸ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.