கழிவுநீர் குளம்போல் தேங்கியதால் அவதி
சேந்தமங்கலம்: காளப்பநாய்க்கன்பட்டி டவுன் பஞ்., கொல்லிமலை சாலையில் புதிதாக கட்டப்பட்ட மின்மயானம் அருகே, டவுன் பஞ்., கழிவு நீர் வாய்க்கால் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த கழி-வுநீர் வாய்க்கால், கடந்த சில நாட்களுக்கு முன் உடைந்ததால், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் கழிவுநீர் புகுந்து விவ-சாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திர-மடைந்த விவசாயிகள், கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் மண்ணை கொட்டி அடைப்பை சரி செய்தனர். இதனால், அந்த கழிவுநீர் காளப்பநாய்க்கன்பட்டி புறவழிச்சலை குறுக்குபா-தையில் செல்ல வழியில்லாமல் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் மக்கள் கடும் அவதிக்குள்ளா-கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement