பழனி பாதயாத்திரை குழுவினர் ஊர்வலம்
ராசிபுரம்: ராசிபுரம், வி.நகர் ஓம் பழனி பாதயாத்திரை மற்றும் அன்ன-தான குழுவினர், 21ம் ஆண்டாக பழனி மலைக்கு, தை, 1ல் பாத யாத்திரை பயணம் தொடங்க உள்ளனர்.
இதையொட்டி, வி.நகர் சித்தி விநாயகர் கோவிலில் அமைந்துள்ள பாலமுருகன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மதியம், அன்னதானம், மாலை முருகன், வள்ளி, தெய்வானை, விநாயகர், ஐயப்பன் சுவாமியை அலங்கரித்து ஊர்வலமாக சென்றனர். நேற்று, வி.நகரில் இருந்து தொடங்கி பட்டணம் சாலை, புதுப்பா-ளையம் ரோடு, சேலம் சாலை, கடைவீதி வழியாக மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர். இதில் மேளதாளத்துடன் ஏராளமான பக்தர்கள் காவடி, வேல் எடுத்து நடனமாடிக் கொண்டே ஊர்வல-மாக சென்றனர். பின், முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரா-தனை செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்-டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement